X

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அதிமுக அரசு இருக்கிறது.

* கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா.

* ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

* தற்போது திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு விழாவின்போது மரியாதை செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.