மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரனாவத் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.