X

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்

நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஜே.ஆர் 28’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இருகதாநாயகிகள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்கிறார்.  படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.