பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டீசர் ஜூலை 8-ஆம் தேதி வெளியாகும் எனவும் முதல் பாடல் ஜூலை 11-ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.