Tamilசெய்திகள்

ஜூலை 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் தேமுதிக!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது. மேலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றுக்காக தமிழக அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது.

இந்த காரணங்களுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.