Tamilசினிமா

ஜூலை 29 ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் சிபிராஜின் ‘வட்டம்’

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. வட்டம் திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வதியாக ஆண்ட்ரியாவும் கோகில வாணியாக அதுல்யாவும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.