மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது. விண்ணில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பூமியில் இருந்து பார்ப்பது அலாதியான அனுபவத்தை தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
ஜூலை 5 – நிலவு இல்லாத நாள் [No Moon Day]
இந்த நாளில் வானில் நிலவு தோன்றாமல் தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்களாக அதிகமாக பிரகாசித்து காண்போரை வசீகரிக்கும்.
ஜூலை 6 – அப்ஹெலியன் [Aphelion]
இந்த நாளில் பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதையே அப்ஹெலியன் நிகழ்வு என்கின்றனர்.
ஜூலை 12 – மெர்குரி எலாங்கேஷன் [Mercury Elongation]
மெர்குரி என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சிறிய கோள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மிகவும் உட்புறமாக உள்ள கிரகமாக உள்ளது. இதனால் பொதுவாகவ்வே பூமியிலிருந்து மெர்குரி கிரகம் நமக்கு புலனாவதில்லை. ஆனால் இந்த நாளில் மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.
ஜூலை 21 – பக் நிலா [Buck Moon]
இந்த நாளில் வானையே ஜொலிக்க செய்யும் அளவுக்கு முழு நிலவு தோன்றும். அதிக இடி இடிக்கும் மாதமாக ஜூலை இருப்பதால் இந்த நாளில் தோன்றும் நிலவுக்கு Thunder Moon என்றும் பெயர் உண்டு. மேலும் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் இதற்கு ஹே நிலவு என்றும் பெயர் உண்டு. அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.
ஜூலை 28& 29 – ஏரிகல் பொழிவு [ Delta Aquarids Meteor Shower]
ஜுலை 28 அன்று இரவும், ஜுலை 29 அன்று காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழிவு ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் மத்தி வரையில் தொடர்ந்து நடக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28& 29] உச்சபட்சமாக பொழிவு இருக்கும்.