கடந்த ஜூன் மாதம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.01 சதவீதமாக இருந்தது. இந்தநிலையில், ஜூலை மாதத்தில் இது 6.71 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவு பொருட்களின் விலை சரிந்ததுதான் இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 5.59 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் ஆகும். தொடர்ந்து 7 மாதங்களாக சில்லரை பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேலேயே இருந்து வருகிறது.