X

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை – அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதின.

இதில் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி இரண்டாவது முறையாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது.