X

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் – இன்று இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதல்

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா, உகாண்டா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜனவரி 15-ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் யாஷ் தல் தலைமையிலான இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

குரூப் பி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.