ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
இதில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் குல்கர்னி – முசீர் கான் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குல்கர்னி 70 ரன்களிலும் முசிர் கான் 48 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.