ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார்.

ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவிக்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools