சர்வம் தாள மயம் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
இதில் விஜய் இயக்கியிருக்கும் `வாட்ச்மேன்’ படம் ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா, சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.