Tamilசினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘ஜெயில்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 3 ஆம் தேதி வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக நடிகை திவ்யபாரதி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வசந்த பாலன் இயக்கியிருக்கும் இப்படம், வாழ்விட மாற்றத்தால் சாமானிய மக்கள் எப்படி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள், என்பது குறித்து பேசுகிறது.