‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ படம் வரை உணர்வுகளை மையப்படுத்தி, ஜனரஞ்சகமாக முறையில் தனது கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் சசி. இவர் அடுத்ததாக சித்தார்த் – ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். முதலில் `ரெட்ட கொம்பு’ என பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் தலைப்பை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று மாற்றியுள்ளனர்.
அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் இந்த படம் பற்றி இயக்குநர் சசி பேசும் போது,
‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
முதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’ என்றார்.