ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர் – இந்திய அணியில் ஷாபாஸ் அகமது சேர்ப்பு

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 1041 ரன்கள் எடுத்துள்ளார். 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools