ஜிடிஏ வித்யாமந்திர் பள்ளியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா!
நீலாங்கரையில் உள்ள ஜிடிஏ வித்யாமந்திர் பள்ளியில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் , அப்துல் காலமின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.எல் ஷேக் தாவுத் கலந்துகொண்டு பாடத்திட்டத்தில் மாணவர்கள் செய்த சாதனைகளுக்கு பரிசுகள் மற்றும் உதவி தொகைகள் வழங்கினார்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களுக்கும் நிகழ்ச்சியில் கெளரவிகிக்கப்பட்டனர்.
பசுமை உலகம் சமூக ரீதியான தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பின்னர் மேடையில் பேசிய டாக்டர் ஏ.பி.ஜே. எம்.எல் ஷேக் தாவூத், தன் தாத்தா அப்துல் காலம் தன்னிடம் கூறியதை போல வாழ்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்றால் கணவு காண வேண்டும், அதுவும் பெரிய அளவில் காண வேண்டும். அப்போது தான் வெற்றியின் அருகில் செல்ல மூடியும் என மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் போது பேட்டியளித்த ஜிடிஏ வித்யா மந்திர் பள்ளி முதல்வர், “ஜி.டி குழுமத்தின் தலைவர் பரத் கே தோசி அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக கல்வித்துறையில் சிறப்பாகவும் ஏழை மாணவர்களுக்கு சிறந்த வகையில் கல்வி சேவை அளித்து வரக்கூடிய எங்கள் பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கல்வியில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்களுக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவியையும் ஜிடி கல்வி அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்படுகிறது.” என்றார்.