X

ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது,

2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

உயர்தர தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, ஜிசாட்30 செலுத்தப்பட்டுள்ளது. ஜிசாட்-30 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

Tags: south news