Tamilசினிமா

‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது

‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.