ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.
அந்த ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது. இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.