ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை விபத்து – 11 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகாரின் கயா நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள டணுவா காட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools