Tamilசெய்திகள்

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நில மோசடி மற்றும் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவர்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டதில் இருந்து ஜாமீனுக்காக தொடர்து ஹேமந்த் சோரன் போராடி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமால் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.