ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அத்துடன் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமைக் கோரினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சம்பாய் சோர்ன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.