X

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நியாயம் உள்ளது – சீமான்

மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். நாளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தொடர்வார்களா? என்று தெரியவில்லை.

முன்பு கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ஜெயலலிதா கிடப்பில் போட்டார். மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நியாயம் உள்ளது.

நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தைதான் கேட்கிறார்கள். அரசு போராடவே கூடாது என்றால் தவறு.

அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக்கூடாது.

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 40 தொகுதிகளில் தலா 20 தொகுதிகள் ஆண்கள் -பெண்களுக்கு ஒதுக்கப்படும். சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news