ஜவான் படத்தின் எடிட்டிங் பணியை முடித்த இயக்குநர் அட்லீ – நடிகர் ஷாருக்கான தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒருவர் “இன்று மாலை என்ன ப்ளான்” என கேள்வி எழுப்பினார். அதற்கு “அட்லீயுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை பார்க்கலாம் என யோசிக்கிறேன்” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார். இதன் மூலம் ‘ஜவான்’எடிட்டிங் வேலை முடிந்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.