ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகள் விழாகோலம் கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட வரும் 14ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
ராகுல்காந்தி வரும் தினத்தன்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சென்னை வருகிறார்.