ஜம்மு காஷ்மீர் கங்கேரா மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கேரா மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பரம் தத் சர்மா கூறுகையில்,

காட்டுப்பகுதியில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். அது இன்னும் தொடர்கிறது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி, தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பரந்த காடுகள் அழிந்துள்ளது. மரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேபோல் ஜம்முவின் ராம்நகர் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools