ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து சுரண்கோடை பூஞ்ச் பகுதியில் இருந்து ஜம்முவிற்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, மஞ்சகோட்டே பகுதியில் உளள டேரி ரால்யாட் வழியாக பேருந்து சென்றபோது சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று இதேபோல் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.