ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார். பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.