Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக பயங்கரவாதிகள், அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இதனால் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாட தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இம்தியாஸ் அகமது தார் எனத் தெரியவந்துள்ளது. இவர் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.