ஜம்மு-காஷ்மீர், ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீர மரணம அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உள்ளபட மூன்று பேர் காயம் அடைந்தனர். அத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த 21-வது ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் சண்டையில் உயிரிழந்தது.
தன்னை வழிநடுத்துபவரை பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது. பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சண்டை நீடித்து வரும் நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.