Tamilசெய்திகள்

ஜம்முவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து சிதறியது – 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்

ஜம்முவில் உள்ள ரெசிடென்சி சாலையில் ஒரு கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதன் தொடர்ச்சியாக அந்த கடையில் வைக்கப் பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறியது.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். கடையில் ஏற்பட்ட தீ, பின்னர் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர்  நிலைமை கவலைகிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா
ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஐம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25,000  இழப்பீடாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.