Tamilசெய்திகள்

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை தகர்க்க வேண்டும் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் சமந்த் குமார் கோயல், மத்திய ரிசர்வ் இயக்குனர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜம்முவில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமித்ஷா ஆய்வு செய்தார்.

காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அப்போது அவர் வலியறுத்தினார். பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சியின் பலன்களை உறுதி செய்தல், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை தகர்க்க வேண்டும் என்றார். பயங்கரவாத சூழல் அமைப்பை அழிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிவினைவாத பிரச்சாரத்திற்கு உதவி, ஊக்கம், ஆதரவு கூறுகளை களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.