ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ துபே மீது துப்பாக்கி சூடு – மருத்துவமனையில் அனுமதி

ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஷின்ஸோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8.29 மணியளவில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டது என்றும், சந்தேகத்தின் பேரில் ஒரு ஆண் நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools