ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.
அதன்பின் தற்போதுதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சர் யோஷிஹிசா புருகாவா உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்காமல் இருக்க முடியாது என ஏற்கனவே புருகாவா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜப்பானில் கிஷிடா-கியோடா பிரதமராக பதவி ஏற்றபின் வழங்கப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவாகும்.