ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதி சுற்றில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவ்தியென் சென்னை பிரனாய் எதிர்கொள்கிறார்.