ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மியாசகியை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன.