ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான – தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தொண்டு, இரக்கம், சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகை ரம்ஜான் என குறிப்பிட்டுள்ளார்.
ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொண்டு, இரக்கம், சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகை ரம்ஜான் என அவர் தெரிவித்துள்ளார்.