தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளிண் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் தான் 1948-ம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சி.ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார். தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.