ஜனாதிபதி திரவுபதி முர்மு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

தியாகம் மற்றும் மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையைப் பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது. இந்நாளில் சமுதாயத்திற்கு பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news