ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள்.
பொது சேவையில் அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது. அவரது பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.