Tamilசெய்திகள்

ஜனவரி 6 ஆம் தேதி தச்சங்குறிச்சி கிராமத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது

2024ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.