X

ஜனவரி 31 ஆம் தேதி இந்திய வரலாற்றில் கருப்பு நாள் – ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்க வைக்க பா.ஜனதா விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னுடைய அரசு ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் 2-ம் பகுதி ஆகும்” என்றார்.

ஹேமந்த் சோரன் பேசும்போது “நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.

நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். இதை பா.ஜனதாவுக்கு சவலாக விடுகிறேன்” என்றார்.

Tags: tamil news