ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி திங்கள் கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும், ஜனவரி 18-ம் தேதி தைப்பூச விழா அரசு விடுமுறை என்பதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ம் அன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவி வருவதால் விடுமுறையில் பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, ஜனவரி 15 என இரு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 16, ஜனவரி 17, ஜனவரி 18 என 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools