ஜனவரி 16, 17, 18 தேதிகளில் தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை மார்க்கங்களில் இயக்கப்படுகின்ற ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

இந்த நிலையில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இன்று அறிவிக்கப்பட்டன. 16, 17-ந்தேதிகளில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

தாம்பரத்தில் இருந்து 17, 18-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக தாம்பரம் வந்து சேருகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து 12-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news