ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்பதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news