Tamilசெய்திகள்

ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் – மத்திய அமைச்சர் தகவல்

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.

அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலனை செய்து வருகிறது.

முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று யாராவது முடிவு செய்தால், நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.