Tamilசெய்திகள்

ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது – சோனியா காந்தி கருத்து

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளில் இருந்தும் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.

இந்த நிலையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சோனியா காந்தி கூறுகையில் “இந்த அரசால் ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒருபோதும் இதுபோன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. அவர்கள் மிகவும் நியாயமான மற்றும் நியாயமான கோரிக்கைகளைத்தான் முன்வைத்தனர்” என்றார்.

இன்று காலை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.