X

ஜக்கு காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல் – 2 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை காஷ்மீர் மண்டல காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.