காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ அவர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் அன்பிற்குரிய தாயின் இனிய நினைவுகளில் அவர் ஆறுதல் பெறட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.